பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் 2,348 ஆக அதிகரிப்பு

Sri Lanka Police Investigation Crime General Election 2024
By Laksi Nov 09, 2024 11:20 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை  2,348 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கடந்த 24 மணி நேரத்தில் 160 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும்  பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 615 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,678 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வன்முறைச் சம்பவங்கள்

அத்தோடு ,தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 20 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் 2,348 ஆக அதிகரிப்பு | General Election 2348 Complaints Registered

மேலும், இதுவரையான முறைப்பாடுகளில் 1861 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 487 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் இடையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் இடையில் கலந்துரையாடல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத 40 சடலங்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத 40 சடலங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW