வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து தோன்றியுள்ள சர்ச்சை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றுக் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பல்வேறான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
அண்மைய நாட்களில் இடம்பெற்ற பரீட்சை மோசடியே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. எனினும், இவ்வாறான எந்த ஒரு மோசடியும் இடம்பெறவில்லை எனவும், பரீட்சையை மீண்டும் நடத்துவது தொடர்பில் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னரும் இவ்வாறான பரீட்சை மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை
எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களுக்கு அப்பால் துல்லியமான தகவல்களை மக்களுக்கு கொண்டுசெல்வது முக்கியமான ஒன்று என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் நாடாளுமன்றில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பரீட்சையில் அதிக பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், பரீட்சை பெறுபேறுகளின் முன்னேற்றம் குறித்தும் கூறியிருந்தார்.