சாதரண தர பரீட்சை முடிவுகள் இன்னும் சில தினங்களில்: கல்வி அமைச்சு உறுதி
கல்வி பொதுத்தர சாதரண தர பரீட்சை முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21.11.2023) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், "தற்போது மாணவர்களின் வயது கடந்து செல்வதோடு, பரீட்சைகளும் தாமதமாகின்றன.
உயர்தர பரீட்சை
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒரு மாதத்தில் வழங்கியுள்ளோம். வரலாற்றில் ஒருமாதத்தில் பெறுபேறுகளை வழங்கியதில்லை.
அதேபோல் சாதரண தர பரீட்சை முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளியாகும். உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
விடைத்தாள்கள் மதிப்பீடு காலதாமதமானதால் முடிவு மூன்று மாதங்கள் தாமதமானது. இல்லையெனில் உயர்தர பரீட்சை நவம்பர் இறுதிக்குள் ஆரம்பமாகியிருக்கும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |