உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல்

Education
By Madheeha_Naz Dec 30, 2023 03:20 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் செயலமர்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (29) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்.

கடும் நடவடிக்கை

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட தகவல் | Gce Al Examination 2024

பரீட்சை முடியும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருட உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2298 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.