உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு: கல்வி அமைச்சர்

Ministry of Education A D Susil Premajayantha Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Sri Lankan Schools
By Fathima Sep 20, 2023 05:52 AM GMT
Fathima

Fathima

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (19.09.2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பிற்போடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு: கல்வி அமைச்சர் | Gce Al Examination 2023 Date And Minister

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

உயர்தரப் பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நடாத்தி, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படலாம்.

அத்துடன் அடுத்த வருட (2024 ஆண்டுக்குரிய) உயர்தரப் பரீட்சை வழமை போல் நடத்தப்படலாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் குறித்த யோசனையை ஏற்றுக்கொண்ட போதிலும் இறுதி முடிவு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் உள்ளது என்று வலியுறுத்தினார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் உடனடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிடுமாறு கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.