உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Education
By Chandramathi
2 years ago

Chandramathi
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(30.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விடைத்தாள் மதிப்பீடு
பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், விஞ்ஞான பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.