வெடிபொருட்களின் உரிம கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல்

Ranil Wickremesinghe Sri Lanka Government Gazette New Gazette
By Fathima Apr 21, 2023 12:45 AM GMT
Fathima

Fathima

வெடிபொருட்கள் தொடர்பான வணிகங்களை நடத்துவதற்கான உரிம கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.

இதன்படி 2,000 ரூபாவாக இருந்த கல் வெடி மருந்து உற்பத்திக்கு மட்டுமான உரிம கட்டணம் 4,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உரிம கட்டணம் அதிகரிப்பு

வெடிபொருட்களின் உரிம கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தல் | Gazette Released By President Minister Of Defense

இதேவேளை பாதுகாப்பு சேவை நூல் தயாரிப்புக்கான உரிம கட்டணம் 4,000 ரூபாவிலிருந்து 7,000 ரூபாவாகவும், கல் ​வெடி மருந்து மற்றும் பாதுகாப்பு சேவை நூல் தயாரிப்புக்கான உரிம கட்டணம் 7,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.     

இதேவேளை வெடி பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் வணிகத்திற்கான உரிம கட்டணம் மற்றும் வெடிபொருள் வழங்குனர்களின் வணிகத்திற்கான உரிம கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  

வெடிபொருட்களை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்குமான அனுமதி கட்டணத்தை 2000 ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.