கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Harrish Sep 08, 2023 07:59 AM GMT
Harrish

Harrish

மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07.09.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Gazette Permitting Cultivation Of Cannabis

சட்டத்திருத்தம்

மேலும் இதற்கான ஆயுர்வேத சட்டத்திருத்தம் கடந்த (05.09.2023) திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்திருத்த அறிவிப்பின் மூலம் அதன் சட்ட நடைமுறையாக்கம் நடைபெற்று வருகிறது.