அரிசி இறக்குமதி தொடர்பாக வெளியான வர்த்தமானி
அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு உரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை டிசம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.
இதன்படி தனியார் இறக்குமதியாளர்கள் கடந்த 20 நாட்களில் 67,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்திருந்தனர்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை அகற்றும் நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாரிய ஆலை உரிமையாளர்கள் அரிசியை களஞ்சியப்படுத்தியமையினால் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் தலைவர் யு.கே.சேமசிங்க அநுராதபுரத்தில் நேற்று(25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |