மிக ஆபத்தான கட்டத்தில் காசா! அடிப்படை தேவைகளுக்காக தவிக்கும் மக்கள்

Palestine World Gaza
By Fathima Jan 31, 2026 01:18 PM GMT

காசா மிக ஆபத்தான கட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. எல்லை கடப்புகள் திறக்கப்பட வேண்டும் என காசாவில் உள்ள பாலஸ்தீனிய அரசு சாரா அமைப்புகளின் வலையமைப்பின் தலைவர் அம்ஜத் ஷாவா தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இனப்படுகொலை என அவர் கூறும் குற்றங்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உதவி பொருட்கள்

இஸ்ரேலின் தினசரி குண்டுவீச்சுகள் தொடர்ந்து மக்களை இடம்பெயரச் செய்து வருவதாகவும், அதே நேரத்தில் அடிப்படை தேவையான பொருட்கள், தங்குமிட வசதிகள் மற்றும் மருந்துகள் காசாவுக்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிக ஆபத்தான கட்டத்தில் காசா! அடிப்படை தேவைகளுக்காக தவிக்கும் மக்கள் | Gaza Is At A Dangerous Stage

மேலும், நாம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். மக்களின் துன்பங்களை குறைக்க எல்லை கடப்புகளை திறந்து உதவி பொருட்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.