காசாவில் உணவு உதவி இனப்படுகொலையின் ஒரு பகுதி! வெளிவரும் உண்மைகள்
காசாவில் நெருக்கடியான காலங்களில் பணியாற்றிய அவசர மருத்துவ நிபுணர் மாட்ஸ் கில்பர்ட், GHF (Gaza Health Foundation) அமைப்பின் செயற்பாடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில, GHF வழங்கும் உணவுப் பொதிகள் பசிக்காக அல்ல, ஆனால் இஸ்ரேலிய அரசின் ஒழிக்கல் மற்றும் இன அழிப்பு (genocide) திட்டத்தின் ஒரு பகுதியாகவே செயற்படுகின்றன.
இன அழிப்பு
உணவுப் பொதிகளின் அளவீடுகள் மோசமானவையாக காணப்படுகின்றது. GHF வழங்கும் உணவுப் பொதிகளில் பால் சார்ந்த பொருட்கள், முட்டை மற்றும் குழந்தைகளுக்கு தேவையான குழந்தை பால் (infant formula) எதுவும் இல்லை.
அதுமட்டுமின்றி, அந்த உணவுகள் சமைக்க வேண்டியவை. ஆனால் காசாவில் தற்போது சமைக்கும் வசதிகள் இல்லாத நிலை உள்ளது.
பசித்த மக்களை ஈர்க்க உணவை ஒரு வலையாக பயன்படுத்துகிறது. பின் அவர்களை அச்சுறுத்தவும், கொல்லவும் திட்டமிட்டுள்ளது. உணவுக்காக வரிசையில் நிற்கும் மக்களை சுடுவது, ஒரு போர் குற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |