எரிவாயு விலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு
LAUGFS Gas PLC
Economy of Sri Lanka
Laugfs Gas Price
By Rakshana MA
லாஃப்ஸ் எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 4,100 ரூபாவாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவுக்கு விற்பணை செய்யப்படவுள்ளது.
எரிவாயுவின் விலை
முன்னதாக ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை திருத்தியமைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்திருந்தது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
அதேபோல், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 168 ரூபாவால் அதிகரிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |