மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரி அதிரடி கைது (Photos)
மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் ஒரு கிலோ 659 கிராம் கேரளா கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்று (22.07.2023) இடம்பெற்றுள்ளது.
மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
வியாபாரத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த சந்தேகநபர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


