கனேமுல்ல சஞ்சீவ படுகொலை : பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

Sri Lanka Police Crime
By Rukshy Feb 21, 2025 06:39 AM GMT
Rukshy

Rukshy

கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்துக்குள் வைத்து நேற்றுமுன்தினம் (19) பாதாள உலகக் கும்பலின் முக்கியஸ்தர் கணேமுல்ல சஞ்சீவ என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 25 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் பலப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றங்களின் பாதுகாப்பு

மட்டக்களப்பில் பலப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றங்களின் பாதுகாப்பு

குற்றத் தடுப்புப் பிரிவினர்

சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி பாதாள உலகக் கும்பலின் முக்கியஸ்தர் கணேமுல்ல சஞ்சீவ என்பவரைச் சுட்டுக்கொலை செய்வதற்குச் சட்டத்தரணி வேடத்தில் சென்ற பிரதான சந்தேகநபருக்கு உதவி செய்த பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கனேமுல்ல சஞ்சீவ படுகொலை : பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது | Ganemulla Sanjeewa Murder Police Arrested

இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பூரில் நிறுவப்படவுள்ள சூரிய மின் வலு உற்பத்தி நிலையம்!

சம்பூரில் நிறுவப்படவுள்ள சூரிய மின் வலு உற்பத்தி நிலையம்!

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW