மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு - இருவர் படுகாயம்
Colombo
Gampaha
Sri Lanka
By Fathima
மினுவாங்கொடை, பொரகொடவத்த பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இருவரும், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.