தமிழ் தரப்பு - ரணில் மீது கொந்தளிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Police spokesman Gajendrakumar Ponnambalam Ranil Wickremesinghe Tamil National Alliance
By Fathima Aug 04, 2023 05:35 AM GMT
Fathima

Fathima

ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வெள்ளையடிக்கும் வேலைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (03.08.2023) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது. 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் முடிவடைந்திருக்கின்ற நிலையில், ஐனாதிபதி அலுவலகத்திலிருந்து மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக எமக்கு மீண்டும் அழைப்பு வந்துள்ளது.

தமிழ் தரப்பு - ரணில் மீது கொந்தளிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Ponnambalam Accuses Ranil

13ஆவது திருத்த சட்டம் 

அந்த விடயத்தில் நாங்கள ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தை என்று சர்வதேச மட்டத்தில் காட்டிக்கொண்டு,  தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு எந்தவித தொடர்பும் இல்லாத ஒற்றையாட்சிக்குள் இருக்கக் கூடிய ஒரு கட்டமைப்பு அடிப்படையில் அரசியலமைப்பில் இருக்கிற 13ஆவது திருத்தம் தொடர்பாக பேச அழைத்துள்ளனர்.

இது மிண்டும் மீண்டும் வடக்கு கிழக்கு வாழ் ஈழத் தமிழர்களை முட்டாளாக்குகின்ற வேலை மட்டுமல்ல அது எந்தளவு தூரத்திற்கு ஈழத்தமிழர்களை ரணில் விக்ரமசிங்க மதிக்கத் தயரில்லை, அல்லது கணக்கெடுக்கத் தயாரில்லை என்பதைக் காட்டுகின்ற ஒரு செயலாகத் தான் இருக்கிறது.

குட்டக் குட்ட குனிபவனும் மடையன் குனியக் குனியக் குட்டுபவனும் மடையன் என்பதுபோல, இதைத் தெரிந்து கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்ற தமிழ்த் தரப்புகள் எந்தளவு தூரத்திற்கு தமிழ் மக்களுக்கு பேரம் பேசக் கூடிய வாய்ப்புகளை முற்றிலும் இல்லாமலாக்கி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை அதுவும் சிங்கள மக்களே ஏற்றுக் கொள்ளாத ஒரு ஆட்சியை முண்டுகொடுக்கின்ற ஒரு செயலாக மட்டும் தான் அமைகிறதென்பதை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் தரப்பு - ரணில் மீது கொந்தளிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Ponnambalam Accuses Ranil

ரணிலின் மோசமான முகம்

இதில் முக்கியமாக ரணில் விக்ரமசிங்கவின் மோசமான முகம் அம்பலமாகியிருக்கின்றது.

ஒரு பக்கம் ஏதோ பெயரில் அதிகாரப் பகிர்வு என்றும் 13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லியும் தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அதேநேரம் இந்த அரசாங்கம் தீவகம் முழுவதையும் ஒரு அதிகார சபைக்குள்ளே கொண்டு வந்து, அந்தத் தீவகத்தில் இருக்கக் கூடிய அனைத்து நிர்வாக வேலைப் பணிகளையும் நேரடியாக ஆட்சி செய்கின்ற ஒரு சட்ட வடிவமொன்று தயாரிக்கப்பட்டு அது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க கூடிய தயார் நிலையில் இருக்கின்றது.

இந்த வடிவம் தயாரிப்பது குறித்து ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு கடைசியாக வந்த போது ஒரு சில புத்திஐீவிகளை அழைத்து அங்கு பேசப்பட்டிருக்கின்றது.

தமிழ் தரப்பு - ரணில் மீது கொந்தளிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Ponnambalam Accuses Ranil

 தமிழ்த் தரப்புக்ககளுக்கு தெரியும்

ஆகவே தீவகத்திற்கான அந்த அதிகாரக் கட்டமைப்பு என்பது மகாவலி அதிகார சபை அபிவிருத்தி திட்டத்தையும் விட மிக மோசமான வகையில் தமிழர்களின் தலைவிதியை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய வகையில் கொழும்பால் மட்டும் நிர்ணயிக்கின்ற ஒரு அதிகார சபையாகத் தான் அந்த உத்தேச வரைபு சட்டம் அமைந்திருக்கின்றது.

இது மிக மிக மோசமான செயல். ஆனால் தமிழ்த் தரப்புக்ககளுக்கு இது நன்றாகத் தெரியும். குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே இந்த விசயம் தெரிய வருகிறதென்றால் இன்றைக்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு முண்டு கொடுக்கிற இந்தத் தரப்புகளுக்கும் நன்றாகத் தெரியும்.

ஆனால், தங்களை ஏதோ தேசியவாதிகள் என்று காட்டிக்கொண்டு இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ள தமிழரசுக் கட்சி புளொட் ரெலோ மற்றும் விக்கினேஸ்வரன் போன்ற தரப்புகளுக்கு இது நன்றாகத் தெரிந்து கொண்டு தான் படுமோசமான இந்தச் செயற்பாடுகளை மூடி மறைத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் மக்கள் மட்டத்தில் வெள்ளையடித்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ் தரப்பு - ரணில் மீது கொந்தளிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Ponnambalam Accuses Ranil

சிங்கள மயமாக்கள்

ஆட்சியாரள்கள் தீவக நிலப்பரப்பை மத்திக்குள் கொண்டு சென்று அதை நிரந்தரமாக கைப்பற்றினால் நாங்கள் தீவகத்தை இழக்க வேண்டிய இடத்தை உருவாகும் எனத் தெரிந்து கொண்டு இந்தத் தரப்புகள் ஆட்சியாளர்களுக்கு துணை போகின்றனர்.

ஏற்கனவே தீவகத்தில் மக்களுடைய வாழ்கயை நடாத்த முடியாத அளவிற்கு நிலைமைகள் உருவாக்கி மக்கள் படிப்படியாக வெளியேறிய நிலைமை தான் இருக்கின்றது.

இந்தச் சந்தரப்பத்தைப் பயன்படுத்தி அந்தச் சனத்தொகையை முற்றிலும் இல்லாமல் செய்து சுற்றுலா போன்ற விடயங்களைக் காட்டி அங்கு சிங்கள மயமாக்குகின்ற வேலைத் திட்டம் தான் இதற்குப் பின்னாள் இருக்கிறது.

தீவக நிலப்பரப்புகள் முழுக்க முழுக்க கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள்.

தமிழ் தரப்பு - ரணில் மீது கொந்தளிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Ponnambalam Accuses Ranil

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை

ஏனென்றால் இந்தியாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் முக்கியமானதாக இருக்கக கூடிய பிரதேசங்கள். அது முற்று முழுதாக சிங்களத் தரப்பிடம் தான் இருக்க வேண்டும்.

அது தமிழர் கையில் இருக் கூடாது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த பிண்ணயில் தான் ஒன்றுமே இல்லாத 13ஆம் திருத்தம் குறித்து இவர்கள் பேசி வருகின்றனர்.

அவவாறு 13ஆம் திருத்தத்திற்குள் பேச்சுவார்த்தையை முடக்கி தமிழ் மக்களுக்கு ஏதோ கொடுக்கப் போதாக பொய்யைக் காட்டி, உண்மையில் நடக்கிற விடயம் இந்த அரசாங்கத்திற்கு வெள்ளையடித்து அதேநேரம் அரசாங்கம் சிங்கள மயமாக்குகிற வேலைகளுக்கு அத்திபாரம் போடுகின்ற செயற்பபடுகளுக்கு துணைபோகிற நிலைமை தான் நடக்கிறது.

இந்த இடத்தில் வடக்கு கிழக்கு தமிழர் தயாகத்தில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் வகையில் எடுக்கப்படுகிற எந்தவொரு திட்டத்தையும் நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை.

தமிழ் தரப்பு - ரணில் மீது கொந்தளிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Ponnambalam Accuses Ranil

கொள்ளையடித்த ராஐபக்சர்கள்

முற்றுமுழுதாக நாங்கள் எதிர்ப்போம். ஆதற்கு எதிராக எங்கள் மக்களையும் அணிதிரட்டுவோம். அது மட்டுமில்லாமல் இந்தச் செயற்பாடுகளுக்கு துணை போகிற தரப்புகளுக்கு எதிராகவும் நாங்கள் எங்கள் மக்கள் பார்வையை திருப்புவோம் என்பதையும் கூறிக் கொள்கிறோம் எனறார்.

எப்படிப் பார்த்தாலும் இந்த ஆட்சி என்பது தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு ஒரு போதும் நீதியைக் கொடுக்கப் போறதில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கொள்ளையடித்த ராஐபக்ச தரப்பின் தயவில் தங்கியிருக்கிற நிலையில், ரணில் விக்ரசிங்கவின் ஆட்சி சிங்கள மக்களுக்கும் கூட நேர்மையாக நடந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த நிலைமையை மாற்றியமைக்ககூடிய ஒரே வழி மக்கள் அணிதிரண்டு ஒரு நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதனூடாக மட்டும் தான் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ் தரப்பு - ரணில் மீது கொந்தளிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Gajendrakumar Ponnambalam Accuses Ranil

தமிழ் அரசியலை முடக்க நடவடிக்கை

தெற்கில் எந்தவிதத்திற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி அதிகாரம் அங்கீகாரம் ஆணை இல்லாமல் அவர் இந்த முடிவுகளை எடுத்து நடத்துகிறாரோ அதே போன்று வடக்கு கிழக்கிலும் சமஷ்டிக்கான ஆணையைப் பெற்றவர்கள் இன்றைக்கு ஒற்றையாட்சிக்குள் இருக்கக் கூடிய 13ஆவது திருத்தத்திற்குள் தமிழர் அரசியலை முடக்குவதற்குச் செயற்படுகிறார்கள் என்பதை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆகவே இன்றைக்கு உண்மையான பிரதிநிதிகளை தீர்மானிக்க கூடிய ஆணையை வழங்கி அந்த ஆணையை மதித்து, ஆணையின் அடிப்படையில் செயற்படக் கூடிய தலைமைத்துவதற்தை தெற்கு தேர்ந்தெடுக்க விரும்புகிறதோ அதே போல தான் வடகிழக்கு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

ஏனெனில் தற்போது தமிழர் தரப்பில் இருப்பவர்கள் அரசியல் மோசடியை செய்து கொண்டு வருகின்றனர். சமஷ்டிக்காகத் தான் இருக்கிறோம் என்று வாக்கைப் பெற்றவர்கள் தீர்வைப் பற்றி கதைக்க வேண்டிய இந்த நேரத்தில் அந்த சமஸ்டியை பற்றி உச்சரிக்காமலே ஒற்றையாட்சிக்குள்ளே தமிழ் அரசியலை முடக்க இங்கேயும் நடவடிக்கை எடுக்கின்றனர்.

ஆகவே இரண்டு பகுதிக்கும் நடக்கிற இந்த மோசமான செயல்களுக்கு விடையாக பாராளுமன்றத் தேர்தல் மட்டும் தான் அமையும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.