க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
Education
By Laksi
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் (GCE O/L)விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் முதலாம் (01) திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் 1,066 மதிப்பீட்டு மையங்களில் நடைபெறும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருத்தும் பணிகள்
முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 1 முதல் 10 வரை நடைபெற உள்ளது.
இதற்காக ஏறக்குறைய 16,000 ஆசிரியர்கள் இணைந்து கொள்வார்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண தர பரீட்சைக்கு நாடளாவிய ரீதியிலுள்ள 3663 பரீட்சை நிலையங்களில் 478,182 பரீட்சார்த்திகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |