பாலித தெவரப்பெருமவின் பூதவுடல் தானே அமைத்த மயானத்தில் நல்லடக்கம்
புதிய இணைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் மதுகம – கரம்பேதர பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசியல்வாதிகள் பலர் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மேலும், அன்னாரின் மறைவையொட்டி, அவரது பிரதேசத்தின் பல இடங்களில் மரண அறிவித்தல் பதாதைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதோடு, வெள்ளைக் கொடிகளையும் பறக்கவிட்டு, பொது மக்களின் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, தனது இறுதிக் கிரியைகளுக்காக தானே அமைத்துக் கொண்ட மயானத்தில், அன்னாரின் உடல் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இரண்டாம் இணைப்பு
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு (Palitha Thewarapperuma) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாலித தெவரப்பெருமவின் (Palitha Thewarapperuma) பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்திற்கு இன்று(19) விஜயம் செய்து அவர் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முதலாம் இணைப்பு
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு (Palitha Thewarapperuma) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் மறைந்த பாலித தெவரப்பெருமவின் (Palitha Thewarapperuma) பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்திற்கு விஜயம் செய்து இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளார்.
அங்கு கருத்துத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), பாலித தெவரப்பெரும தேசத்தின் குடிமக்களுக்காகவும் அவர்களுக்காகவும் நின்று உழைத்த ஒரு அரசியல்வாதி என் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி பலி
மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் (Palitha Thewarapperuma) இறுதிக் கிரியைகள் (Funeral) இன்று (19.4.2024) பிற்பகல் 2 மணி அளவில் இடம்பெறவுள்ளன.
பாலித தெவரப்பெரும (Palitha Thewarapperuma) தனது 64 ஆவது வயதில், கடந்த 16 ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தேவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |