யானை தாக்குதலுக்கு இலக்காகும் முஸ்லிம் பாடசாலைக்கு நிர்மாணிக்கப்படவுள்ள சுற்றுமதில்

Sri Lanka Money Sri Lankan Schools
By Laksi Jul 30, 2024 12:48 PM GMT
Laksi

Laksi

அடிக்கடி யானை தாக்குதலை சந்தித்து வரும் சம்மாந்துறை கல்வி வலய வாங்காமம் கமு/சது/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை சுற்றுமதில் நிர்மாணிக்க 4.5 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.முகம்மட் ஹரீஸின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் இந்த நிர்மாண பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

கமு/சது/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் யூ.எல்.பயாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எச்.எம்.முகம்மட் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுமதில் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்துள்ளார்.

இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கட்டட புனரமைப்பு ஆரம்பித்து வைப்பு

இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கட்டட புனரமைப்பு ஆரம்பித்து வைப்பு

நிதி ஒதுக்கீடு

இதன்போது, குறித்த பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பிரதியெடுக்கும் இயந்திரம், அலுவலக தளபாடங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

யானை தாக்குதலுக்கு இலக்காகும் முஸ்லிம் பாடசாலைக்கு நிர்மாணிக்கப்படவுள்ள சுற்றுமதில் | Funds For Reconstruction Of Sammanthurai School

இந்த நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.ஜமீல் காரியப்பர், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.நிஷார், வாங்காமம் ஒராபி பாஷா வித்தியாலய அதிபர் யூ. எல்.தாஹிர், வாங்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் ஐ.எல். சபின், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், சிரேஷ்ட ஆலோசகர் எம்.ஏ. கலீல் ரஹ்மான், இணைப்பாளர் எம்.எப்.எம். பர்ஹான், அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை முன்னாள் அதிபர் எம். ஹார்தீன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச முக்கியஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள்

கிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள்

மொட்டுக் கட்சிக்குள் பிளவு: ரணிலுக்கு எழுந்துள்ள ஆதரவு

மொட்டுக் கட்சிக்குள் பிளவு: ரணிலுக்கு எழுந்துள்ள ஆதரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery