போரா மாநாட்டை வெற்றிகரமாக நடத்த அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் - சாகல ரத்நாயக்க

Sri Lanka Sagala Ratnayaka
By Mayuri Jun 26, 2024 02:45 AM GMT
Mayuri

Mayuri

இலங்கையில் நடத்தப்படவிருக்கும் போரா சமூகத்தின் வருடாந்த ஆன்மிக மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தேவையான முழுமையான ஆதரவை வழங்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போரா மாநாடு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

போரா மாநாட்டை வெற்றிகரமாக நடத்த அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் - சாகல ரத்நாயக்க | Full Support For Bora Conference And Convention

இந்த ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டுடன் இணையான போரா ஆன்மீக மாநாடு ஜூலை 7 - 16ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து சுமார் பதினைந்தாயிரம் போரா சமூகத்தினர் இலங்கைக்கு வரவிருப்பதால், அவர்களுக்கான விமான நிலைய வசதிகள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக் கொடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

போரா மாநாட்டை வெற்றிகரமாக நடத்த அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் - சாகல ரத்நாயக்க | Full Support For Bora Conference And Convention

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை சுங்கம், குடிவரவு திணைக்களம், கொழும்பு மாநகர சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை பொலிஸ், முஸ்லிம் சமய விவகார திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW