பெற்றோல் நெருக்கடியின் பின்னணியிலுள்ள சதி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Anil Jayantha Fernando
By Vethu Mar 01, 2025 07:45 AM GMT
Vethu

Vethu

நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்து உரையாற்றினார்.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க சதி நடவடிக்கையை சில தரப்பினர் முன்னெடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

எரிபொருள் நெருக்கடி

எரிபொருள் நெருக்கடி மீண்டும் ஏற்பட்டுள்ளதாக காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டினார்.

பெற்றோல் நெருக்கடியின் பின்னணியிலுள்ள சதி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் | Fuel Shortage Sri Lanka 2025 Today Update