எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Economic Crisis Sri Lanka Fuel Crisis
By Fathima Apr 04, 2023 11:24 AM GMT

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று (4) நள்ளிரவு முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்பு திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்திற்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புகளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பதிவு செய்து பெற்றுக் கொண்டுள்ளது. 

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு | Fuel Quota To Be Increased For New Year Festivel

முழுமையான விபரம் 

அதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கு 5லிட்டர் முதல் 8லிட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கு 4லிட்டர் முதல் 7லிட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கு 40லிட்டர் முதல் 60லிட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்கு 20லிட்டர் முதல் 30லிட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

லொரிகளுக்கு 50லிட்டர் முதல் 75லிட்டர் வரையிலும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு 20லிட்டர் முதல் 30லிட்டர் வரை வான்களுக்கு 20 லிட்டர் முதல் 30லிட்டர் வரை எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு | Fuel Quota To Be Increased For New Year Festivel