எரிபொருள் விலை திருத்தம் மற்றும் கோட்டா அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
Fuel Price In Sri Lanka
Kanchana Wijesekera
National Fuel Pass
By Fathima
எரிபொருள் விலை திருத்தம் மற்றும் எரிபொருள் கோட்டா அதிகரிப்பு என்பன தொடர்பில் சற்று முன் தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (26.05.2023) டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தேசிய எரிபொருள் அனுமதி - QR அமைப்பில் தற்போது அனுமதிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை திருத்தத்திலிருந்து அதிகரிக்கப்படும்.
பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் நிதி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் திணைக்களங்களுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
