எரிபொருள் முன்பதிவை தாமதமாக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Madheeha_Naz Jun 05, 2023 01:29 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

இலங்கையில் உள்ள  எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாத இறுதியில் எரிபொருள் முன்பதிவை தாமதமாக்குகின்றனர் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். 

திவுலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற  நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும்,  எதிர்வரும் இரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்கீட்டு முறைமையை நீக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எரிபொருளுக்கான வரிசை

எரிபொருள் முன்பதிவை தாமதமாக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் | Fuel Qr System Sri Lanka

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைத்திருத்தம் முன்னெடுக்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாத இறுதியில் எரிபொருள் முன்பதிவை தாமதமாக்குகின்றனர். அவர்களுக்கு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நிரப்பு நிலையங்களில், QR முறைமை நடைமுறையில் உள்ளதால் எரிபொருளுக்காக வரிசைகள் ஏற்பட்டுள்ளன.

இன்னும் இரண்டு மாதங்களில், 150 நிரப்பு நிலையங்களுடன் சினோபெக் நிறுவனம் விநியோக நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது. குறித்த நிறுவனம் விநியோகத்தை ஆரம்பித்ததன் பின்னர், அது தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கும்.

இதையடுத்து, தற்போது நடைமுறையில் உள்ள QR குறியீட்டு முறைமை நீக்கப்படும்  என குறிப்பிட்டார்.