முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Transport Fares In Sri Lanka
By Laksi Oct 01, 2024 03:13 PM GMT
Laksi

Laksi

முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படும் என அறிவிக்கும் நிலையில் தாம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  அதற்கான சட்டப்பூர்வ உரிமை மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபைக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெற்றோல் இலவசமாக வழங்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்கும் பொறிமுறை இல்லை.

மட்டக்களப்பில் சிறுவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் சிறுவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Fuel Prices Reduced Three Wheeler Changes Revision

முச்சக்கரவண்டி சேவை

மேல் மாகாண சபையின் வீதிப் போக்குவரத்து அதிகார சபையினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட முச்சக்கரவண்டிப் பயணிகள் போக்குவரத்துத் திட்டம் வழிதவறிச் செல்கின்றது.

அதனை மீளச் செயற்படுத்தி நடைமுறைப்படுத்த திட்டமிட்டால் தரமான முச்சக்கரவண்டிச் சேவையை ஏற்படுத்தத் தயார் எனவும் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Fuel Prices Reduced Three Wheeler Changes Revision 

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, பேருந்து கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பில் சிறுவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் சிறுவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சி

தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW