எரிபொருள் விலை குறைப்பு:வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
புதிய விலை
ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாவாகும்.
அதேபோல், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.
அத்தோடு, லங்கா வெள்ளை டீசல் 286.00 ரூபாவுக்கும் , சூப்பர் டீசல் 331.00 ரூபாவுக்கும் மற்றும் மண்ணெண்ணெய் 183 ரூபாவுக்கும் என்ற அதே விலையில் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) நள்ளிரவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் இந்த நாட்களில் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலை
இதனால் நாட்டில் எரிபொருள் விலை குறையக்கூடும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த மாதமும் அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |