எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

Twitter Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis
By Fathima Mar 28, 2023 04:28 PM GMT
Fathima

Fathima

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL) ஆகிய இரு நிறுவனங்களின் ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்புதல் மற்றும் விநியோகம் செய்வதில் ஈடுபடுவதிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு பெட்ரோலிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்ததன் பின்னணியில் விஜேசேகரவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு | Fuel Crisis Terminate Employment Cpc Cpstl

சிபிசியை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தை கைவிட்ட போதிலும், தொழிற்சங்க கூட்டு பின்னர் அதற்கு பதிலாக வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை (CPC) தனியார் மயமாக்க அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிராக நேற்று (மார்ச் 27) சத்தியாக்கிரகப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது.