எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

Fuel Price In Sri Lanka Sri Lanka Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis
By Fathima Mar 29, 2023 09:43 PM GMT

நாட்டில் இன்று(29.03.2023) விநியோகிக்கப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், இன்றையதினம் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 6,600 லீட்டர் ஒட்டோ டீசல் 574 லோடுகளும், 6,600 லீட்டர் 92 பெற்றோல் 512 லோடுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு! | Fuel And Diesel Price In Sri Lanka

இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் மற்றும் பிராந்திய கிடங்குகளில் இருந்து இவ்வாறு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் அனைத்துப் பணியாளர்களுக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் விநியோகத்திற்கு தேவையான பாதுகாப்பை பொலிஸாரும் ஆயுதப்படையினரும் தொடர்ந்து வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.