ஷைக் யாஸர் அத்தூஸ்ரின் முகநூல் பக்கத்திலிருந்து ஒரு பதிவு

Ramadan
By Fathima Apr 05, 2023 12:38 AM GMT

கண்ணியமும் மகத்துவமிக்க அல்லாஹ்வே, உன்னுடைய அடியான் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன் என் ரப்பே என யாஸர் தூஸ்ரி பைத்துல் ஹராமிலிருந்து தனது பிராத்தனையை அனைவருக்குமாக மேற்கொண்டுள்ளார்.

அவரது முகநூல் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,இங்கே மக்கள் கூட்டம் நிறைந்திருக்கிறது. அவர்களின் சூழ்நிலைகள் மற்றும் தேவைகள் எனக்குத் தெரியாது. அவர்களின் இதயங்களில் என்ன இருக்கிறது என்றும் எனக்குத் தெரியவில்லை யா அல்லாஹ்!

ஷைக் யாஸர் அத்தூஸ்ரின் முகநூல் பக்கத்திலிருந்து ஒரு பதிவு | From Shaikh Yasser Atthusri S Facebook Page

அவர்களில் நோயுற்றிருப்போரை குணப்படுத்துவாயாக! அவர்களில் யார் துன்பத்தில் இருக்கிறாரோ, அவரின் துன்பத்தை நீக்குவாயாக! யார் தேவையுடையவராக இருக்கிறாரோ அவருடைய தேவையை நிறைவேற்றுவாயாக! யார் கவலையுடன் இருக்கிறாரோ அவரின் கவலையைப் போக்குவாயாக! யார் கடனாளியாக இருக்கிறாரோ அவர் கடனை நிறைவேற்றுவாயாக!

எந்தப் பெண் தன்னை கண்ணியப்படுத்தும் வாழ்க்கைத் துணைக்காகக் காத்திருக்கிறாரோ அவருக்கு ஸாலிஹான கணவரைத் தருவாயாக! யார் குழந்தைக்காக காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு ஸாலிஹான சந்ததியைத் தருவாயாக! அவர்கள் யாரெல்லாம் தங்கள் உள்ளத்தில் என்னென்னத் தேட்டங்கள் வைத்திருக்கிறார்களோ, அவற்றை நீ மட்டுமே அறியமுடியும் அவற்றை லேசாக்குவாயாக அவர்களுக்கு சிறந்ததை நீ தேர்ந்தெடுத்து என தெரிவித்துள்ளார்.