வெள்ளிக்கிழமை ஓத வேண்டிய ஸலவாத்து
ஜூம் ஆ நாளான வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பின்னர் தொழுத இடத்தை விட்டு எழுந்திருக்கும் முன் 80 தடவை குறித்த ஸலவாத்தை ஓதினால் அவருடைய 80 வருட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
மேலும் 80 வருடங்கள் வணக்கம் புரிந்த நன்மைகள் எழுதப்படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹள்ரத் அபூஹு ரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ ஸல்லிம் தஸ்லீமா
வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது ஏன்?
அல்லாஹ் வாரத்தை 7 நாட்களாக ஆக்கி அதில் மிகச் சிறந்த நாளாக வெள்ளிக் கிழமையை ஆக்கி உள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும்
1) வெள்ளிக்கிழமை அன்று தான் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்தான்.
2) வெள்ளிக்கிழமை அன்று தான் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்பினான்.
3) வெள்ளிக்கிழமை அன்று ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றினான்! வெள்ளிக்கிழமை நாளில் தான் அல்லாஹ் அவர்களின் உயிரையும் கைப்பற்றினான்.
4) வெள்ளிக்கிழமை அன்று கியாமத் நாள் ஏற்படும்.
5) வெள்ளிக்கிழமை அன்று தான் முதல் மற்றும் இரண்டாம் சூர் ஊதப்படும் (நூல் : முஸ்லிம் : 1548 | அபூதாவூத் : 1047 | அஹ்மத் : 10303)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில், அதில் ஒரு நேரம் இருக்கிறது.
சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.