கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் போர்க்கப்பல்

Port of Colombo Sri Lanka France
By Rukshy Mar 17, 2025 02:03 PM GMT
Rukshy

Rukshy

பிரான்ஸின் (France) கடற்படைக் போர்க் கப்பலான பிரொவென்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த DESTROYER ரக ‘PROVENCE’ என்ற கப்பல் கடற்படை மரபுப்படி வரவேற்கப்பட்டது.

இப்போர்க்கப்பல் 142.20 மீற்றர் நீளமும், மொத்தம் 160 நிர்வாகக் குழுவினரையும் கொண்டதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் லியோனல் செக்பெரிட் பணியாற்றுகின்றார்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் போர்க்கப்பல் | French Warship Arrives At Colombo Port

குறித்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் நிர்வாகக் குழுவினர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்த பின்னர் 20 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட உள்ளது.