இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவரிடம் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

European Union Sri Lankan political crisis Jeevan Thondaman France
By Fathima Jun 06, 2023 11:20 PM GMT
Fathima

Fathima

மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் எதிர்நோக்கும் போசணை மற்றும் தற்சார்பு பொருளாதார பிரச்சினைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தனது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும் என இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவரிடம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜோன் போன்ஷுவா பெக்டே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானை நேற்று (06.06.2023) கொழும்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இந்த நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் செய்து வரும் உதவிகளையும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவரிடம் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை | French Ambassador To Request Made Jeevan Thondaman

பிரான்ஸ் அரசாங்கத்தின் முதலீடு

இதேவேளை தாங்கள் எமது மலையக மக்களின் அபிவிருத்திக்கும் அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், மலையகப் பகுதிகளில் பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதி உதவி உடன் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், போசனை அபிவிருத்தி தொடர்பாக தாங்கள் பிரான்ஸ் தூதுவர் என்ற வகையில் தங்களின் அரசின் வழிகாட்டல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவரிடம் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை | French Ambassador To Request Made Jeevan Thondaman

மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்ஸ் அரசாங்கம் நாட்டின் முதலீடுகளை மேற்கொள்ள ஆவணம் செய்ய வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன், இராஜங்க அமைச்சரின் ஆலோசகர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.