இலங்கை கடலில் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

Indian fishermen Sri Lanka Fisherman Fish Price In Srilanka
By Ashik Jun 23, 2024 11:57 AM GMT

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, இன்று (23) அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கைதான 18 இந்திய கடற்றொழிலாளர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.