இலங்கையிலுள்ள 25,000 குடும்பங்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள மகிழ்ச்சியான தகவல்

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Renuka May 10, 2023 07:34 AM GMT
Renuka

Renuka

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச சோலார் பேனல் (Solar panel) வழங்கும் திட்டம் அமைச்சரவையின் அனுமதியின் பிறகு ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இந்த இலவச சூரிய படலங்களை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (10.05.2023) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே  இதனை கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள 25,000 குடும்பங்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள மகிழ்ச்சியான தகவல் | Free Solar Panel For 25 000 Families

சூரியப்படலம் மூலம் மின்சாரம் 

மேலும் அவர் கூறியுள்ளதாவது, இந்த சோலார் பேனல் மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியைத் தேசிய மின் கட்டமைக்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்குச் சோலார் பேனல் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கு சோலார் பேனல் மூலம் மின்சாரம் வழங்கப்படும்.

இதற்காக ஒரு வீட்டுக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.