கல்முனையில் நடமாடும் இலவச சுகாதார வைத்திய சேவை (Photos)

Batticaloa Ministry of Health Sri Lanka Eastern Province Kalmunai
By Farook Sihan Aug 20, 2023 07:43 AM GMT
Farook Sihan

Farook Sihan

ஆளுநரின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட அலுவலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து நடமாடும் இலவச சுகாதார வைத்திய சேவைகளை முன்னெடுத்துள்ளது. 

குறித்த நிகழ்வு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று (19.08.2023) நடைபெற்றுள்ளது.

இதற்கமைய  நடமாடும் இலவச சுகாதார வைத்திய சேவையில் பற்சிகிச்சை ,கண்பரிசோதனை,தொற்றா நோய் பரிசோதனைகள்,ஆயுர்வேத மருத்துவ சேவைகள் , உடல் நிறை குறியீட்டு(BMI) பார்த்தல்,இரத்த அழுத்தம் நீரிழிவு நோய்க்குரிய பரிசோதனைகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

விண்ணப்ப விநியோகம்

மேலும் தகுதியுடையவர்களுக்கான பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு விண்ணப்ப விநியோகம்,தகுதியுடையவர்களுக்கான முதியோர் அடையாள அட்டை விண்ணப்ப விநியோகம் ,மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதார சேவைகள் தகுதியுடையவர்களுக்கான நோய்க் கொடுப்பனவுக்கான விண்ணப்ப விநியோகம் (புற்றுநோய், சிறுநீரக நோய், தலசீமியா, தொழுநோய்) என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனையில் நடமாடும் இலவச சுகாதார வைத்திய சேவை (Photos) | Free Mobile Health Care Service Held At Kalmunai

குறித்த நடமாடும் சேவையில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி ,கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் முஹம்மத் அஸ்மி, கல்முனை பிராந்திய வாய்ச்சுகாதார நிபுணர் எம்.எச்.எம் சரூக் ,நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எச் ஜனூபா, சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம் .ஜீசான் , உட்பட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் சுகாதார பரிசோதகர்கள் , குடும்ப நல உத்தியோகத்தர்கள், கல்முனை பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு குறித்த நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பொது மக்களின் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தகக்து.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery