திருகோணமலை மாவட்ட செயலக ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
திருகோணமலை மாவட்ட செயலகத்தில், கடமை புரியும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மருத்துவ முகாமானது, இன்று(30) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமாரவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றுள்ளதுடன், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இதில் கலந்துகொண்டு, மருத்துவ சேவைகளை வழங்கியிருந்தனர்.
 
    
    பொது மக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகள்! போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
மருத்துவ முகாம்
இதன் போது, இரத்த சிறுநீர் பரிசோதனைகளும், இரத்த அழுத்த பரிசோதனைகளும், பற் சிகிச்சைகளும் இடம்பெற்றன.

அத்துடன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழு உறுப்பினர்களும், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் கலந்து மருத்துவப் பரிசோதனைகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 




 
                                        
                                         
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
    