பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லாத கடன்! சஜித் வெளியிட்டுள்ள தகவல்

Parliament of Sri Lanka Sajith Premadasa Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Fathima Jun 23, 2023 10:21 PM GMT
Fathima

Fathima

நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு மேலதிக கல்விக்காக வட்டியில்லா கடன்களை வழங்கிய போதிலும் 2021/2022 ஆம் வருட தொகுதி மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்குத் தேவையான வர்த்தமானி வெளியிடப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(23.06.2023) உரையாற்றும் போதே அவர் முற்கண்டவாறு தெரிவித்தார்.

கடனை வழங்குமாறு கோரிக்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லாத கடன்! சஜித் வெளியிட்டுள்ள தகவல் | Free Loans For Sri Lankan Students

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 2017 ஆம் ஆண்டு, பட்டதாரி கற்கைகளை வழங்கும் ஆறு கல்வி நிறுவனங்களுக்கு, 26 கற்கைகளுக்காக 8 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன் வழங்கப்பட்டதாகவும், ஆனால் 2021/202 தொகுதி மாணவர்களுக்கு இந்தக் கடன் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கூட கிடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையின் அங்கீகாரம் கூட கிடைக்கப்பெற்றிருக்கும் இவ்வேளையில் இது நடைமுறைப்படுத்தப்படாமை பிரச்சினையாகும் என்றும், விதிமுறைகளை தற்போது ஏற்படுத்தாது, 7ஆம் தொகுதிக்கு முன்னுரிமை கொடுத்து கடனை வழங்க வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது  வேண்டுகோள் விடுத்தார்.