யாழ். மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Jaffna Jaffna Teaching Hospital Northern Province of Sri Lanka
By Fathima Aug 03, 2023 09:06 AM GMT
Fathima

Fathima

கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை யாழ். போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படடமுள்ளது.

மேலும், சத்திர சிகிச்சைகளுக்கான கண்வில்லைகளும், சத்திரசிகிச்சை நுகர்வு பொருட்களும் மற்றும் மருந்துப் பொருட்களும் மலேசியாவைச் சேர்ந்த அலாக்கா மற்றும் ஆனந்தா நிறுவனத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது.

யாழ். மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Free Cataract Surgery In Jaffna

கோப்பாய் பிரதேசம்

இதனடிப்படையில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரதேசத்தில் வசிக்கும் கண்புரை சத்திரசிகிச்சை செய்யவேண்டிய நோயாளர்களைத் தெரிவு செய்யும் இலவச கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் சனிக்கிழமை (05.08.2023) காலை 9 மணி தொடக்கம் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

அதேபோன்று உடுவில் பிரதேச செயலகப் பிரிவினைச் சேர்ந்த கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களைத் தெரிவுசெய்யும் இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் சனிக்கிழமை (05.08.2023) காலை 9.00 மணி தொடக்கம் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் நடைபெறவுள்ளது.

குறித்த முகாமில் கண்புரை சத்திரசிகிச்சைக்குத் தெரிவு செய்யப்படும் நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் திகதி பின்னர் அவர்களுக்கு அறிவிக்கப்படும்.

யாழ். மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Free Cataract Surgery In Jaffna

இலவச சேவை

கண்புரை சத்திரசிகிச்சைக்கு தெரிவு செய்யப்படும் நோயாளர்களை அந்தந்தப் பிரதேசத்திற்குரிய வைத்தியசாலைகளில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கான வசதிகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்வுள்ளது.

அத்துடன், சத்திரசிகிச்சை முடிவடைந்த பின்னர் மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து அவர்களது பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சுகாதார திணைக்களத்தினரால் இலவசமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளர்கள் மேற்படி பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு தங்களது பெயர்களைப் பதிவுசெய்யுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.