ஜனாதிபதி அலுவலகத்தின் பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Anadhi Apr 28, 2024 12:00 PM GMT
Anadhi

Anadhi

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நபர்கள் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான மோசடியாளர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி செயலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

நபர்கள் தொடர்பில் சந்தேகம்

மேலும் அவ்வாறான நபர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டால் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரை தொடர்புகொண்டு, தகவல் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Fraud In The Name Of The Office Of The President

மேலும்,  +94 71 530 8032 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு, தகவல் பெற்றுக்கொள்ளுமாறும் அலுவலகம் கோரிக்கைவிடுத்துள்ளது.