இரண்டு பெண்கள் செய்த பாரிய மோசடி: அம்பலமான தகவல்!

Sri Lanka
By Fathima Apr 20, 2023 07:32 AM GMT
Fathima

Fathima

கட்டாரில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு பெண்கள் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண்கள் கட்டாரில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 6 இலட்சம் ரூபா வரை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்றைய தினம் (20.04.2023) ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறிப்பட்டுள்ளது.

இரண்டு பெண்கள் செய்த பாரிய மோசடி: அம்பலமான தகவல்! | Fraud By Two Women

வங்கிக் கணக்கில் பணம்

சந்தேக நபர்களான இரண்டு பெண்களும் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர்கள் பல சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்களான பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிட்டுள்ளதாகவும் அவர்களிடம் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும்பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.