நீர் பங்கு சட்டத்திற்கு முரணான முறையில் விற்பனை! முறைப்பாடு பதிவு

Sri Lankan Tamils Kilinochchi Sri Lankan Peoples
By Fathima Jun 14, 2023 08:44 AM GMT
Fathima

Fathima

விவசாயி ஒருவருக்கு சொந்தமான சிறுபோக நீர் பங்கு வழங்கப்படாது தடுக்கப்பட்டு அதனை இரகசியமான முறையில் சுமார் மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபாவிவிற்கு சின்னக்காடு கமக்கார அமைப்புக்கு சட்டத்திற்கு முரணான முறையில் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவரான விவசாயியால் கம நல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மோசடிகளின் பின்னணி

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான புலிங்க தேவன் முறிப்பு பகுதியில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பயிர்செய்கை மேற்கொண்டு வந்த விவசாயியின் பங்கு உரிமை உரிமை சிறுபோகத்தில் இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்து அவருக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் நீர் பங்கு கமக்கார அமைப்பின் தலைவரால் மோசடி செய்யப்பட்டு மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய்க்கு சின்னக்காடு கமக்கார அமைப்புக்கு சட்டத்திற்கு முரணான முறையில் விற்பனை செய்யப்பட்டமை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன்

இவ்வாறான மோசடிகளின் பின்னணியில் சில அதிகாரிகளும் இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது இவ்வாறான குறித்த பிரதேசத்தில் இருந்து விவசாயிகளிடம் நிறுத்தப்பட்ட சுமார் 43 வரையான சிறுபோக நீர் பங்குகள் கமல சேவை நிலையங்களின் எந்த ஒரு அறிவுறுத்தல்களும் இன்றி பங்கு மாற்ற பட்டியல்கள் தன்னிச்சையான விதத்தில் சின்ன காடு கமக்கார அமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது

இவ்வாறான செயற்பாடுகள் பல்வேறு மோசடிகளுக்கு வழி வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயியால் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீட்டை பெற்றுக் கொடுப்பதுடன் குறித்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கை உட்படுத்தப்படும் என்றும் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக் களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.