வேகமாகப் பரவிவரும் காய்ச்சல் - 4 பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்
schools
viral disease
By Vinoja
தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பரவி வரும் இன்ஃபுளுவென்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக, மே 07 மற்றும் 08 ஆகிய தினங்களில் நான்கு முக்கிய பாடசாலைகளை தற்காலிகமாக மூடப்படுவதற்கு தீர்மானிக்கப்ட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிசாக ஹெட்டிகொட தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களிடையே இந்த வைரஸ் தொற்று மேலதிகமாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
தென் மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளரார்.