யாழ். அல்லைப்பிட்டியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் (Photos)
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Magistrate Court
Crime
By Fathima
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி இராண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வீடொன்றின் கட்டுமானம் மேற்கொள்வதற்காக கிடங்கு வெட்டிய போதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அகழ்வுப்பணி
குறித்த பகுதி குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்றையதினம் (21.06.2023) நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.