அரச ஊதிய முறைகேடு விசாரணை: கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் கைது

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa Government Of Sri Lanka Crime
By Vinoja Jun 18, 2026 04:11 PM GMT

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் முன்னாள் செயலாளரான சுகீஸ்வர பண்டார குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்க நிறுவனங்கள் இரண்டிலிருந்து ஒரே காலப்பகுதியில் ஊதியம் பெற்றதாகவும், அதன் மூலம் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊதிய முறைகேடு விசாரணை: கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் கைது | Former Secretary Of Gotabaya Rajapaksa Arrested

அரச ஊதியங்கள் தொடர்பான முறைகேடு புகார்கள் குறித்து CID முன்னெடுத்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக சுகீஸ்வர பண்டார தங்களது கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளார்.

இரண்டு வெவ்வேறு அரச நிறுவனங்களிலிருந்து ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.