முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் விஜயம்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் நாளையதினம்(28.06.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இவர் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும், சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மததலைவர்களின் சந்திப்பு
அவற்றோடு, சர்வமத வழிபாடுகளிலும் கலந்துகொள்ளும் மைத்திரிபால சிறிசேன, மததலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் சமூகமட்ட நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
யாழ்.மாவட்ட மக்கள் பிரச்சினைகள் தேவைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்த்து பலமான அரசியல் அழுத்தங்களையும் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வதும் இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.