பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்பில் சகோதரி வெளியிட்ட தகவல்
இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக இம்ரான் கானின் சகோதரி உஸ்மா தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானை சிறையில் சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,“இம்ரான் கான் நலமுடன் உள்ளார். ஆனால் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். சிறை வளாகத்தில் நடமாடவும் அதிக நேரம் தரப்படுவதில்லை.'' என தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் சிறையில்...
பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி தலைவராக இருந்த இம்ரான் கான், பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் என்ற பெயரில் கட்சி தொடங்கி அந்த நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

பதவியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்கள் கொடுத்த பரிசு பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக ‘தோஷ்கானா’ வழங்கில் கைதானார்.
பதவி பறிக்கப்பட்டு பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டியில் உள்ள அடிலா சிறையில் 2023 ஆம் ஆண்டு அடைக்கப்பட்டார்.
தனியறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை சந்திக்க உறவினர்களுக்கு கடந்த ஓராண்டாக அனுமதியளிக்கப்படவில்லை. இதனால் அவர் சித்ரவதை செய்யப்பட்டு சிறையிலேயே இறந்துவிட்டதாக ஊகங்கள் கிளம்பின.
இந்தநிலையில் நேற்று இம்ரான் கான் சகோதரி உஸ்மாவுக்கு இம்ரான் கானை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.