முன்னாள் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் பலி
Trincomalee
Eastern Province
Accident
By Fathima
வாகன விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம், திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா கொழும்பு பிரதான வீதியின் வில்வெலி பகுதியில் இன்று (27.11.2025) இடம்பெற்றுள்ளது.
விசாரணை
கிண்ணியா சூரங்கல் பகுதியை சேர்ந்த 56 வயது மதிக்கத்தக்க இப்னு எனும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.