ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிச்செல்ல இருந்த வெளிநாட்டவர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(23) கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் ஐடி அதிகாரியாக பணிபுரியும் 34 வயதான ரஷ்யர் ஆவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த போதைப்பொருளை தனது சூட்கேஸில் கவனமாக மறைத்து வைத்து இலங்கை வந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணை
இதுதவிர, உலக நாடுகளுக்கு இடையே குஷ் போதைப்பொருளை பயிரிட்டு தயாரித்து விநியோகம் செய்பவர் என பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த போது, கடற்பாசியால் செய்யப்பட்ட தலையணையில் 01 கிலோ 50 கிராம் குஷ்யை மிக நுணுக்கமாக மறைத்து எடுத்து வந்து, உறங்க பயன்படுத்தியுள்ளார்.
சந்தேகத்திற்குரிய ரஷ்ய பிரஜையை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |