கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழந்தையை பிரசவித்த பெண்!
டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பெண் பயணி விமான நிலையத்தில் குழந்தையொன்றினை பிரசவித்துள்ளார்.
குறித்த கர்ப்பிணி பெண் இன்று (05) காலை டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
பிரசவ வலி
கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த குறித்த பெண் பயணி மலேசியாவின் கோலாலம்பூருக்கு புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் போக்குவரத்து முனையத்தில் காத்திருந்துள்ளார்.

இதன்போது பிரசவ வலியின் ஆரம்ப அறிகுறிகளுடன் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியுடன் அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதன்பின்னர் தாயும் குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.