வெளிநாட்டு சேவைகள் பணியகத்தின் புதிய திட்டம்: வெளியாகியுள்ள தகவல்

Government Of Sri Lanka Foreign Employment Bureau Ministry of Foreign Affairs - sri lanka
By Rakshana MA Oct 16, 2024 12:18 PM GMT
Rakshana MA

Rakshana MA

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் போது மக்களிடம் பெறப்படும் பணத்தொகையினை நூறு வீதம் இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் இதனை நேற்று (15) பணியகத்தில் உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

மீன்பிடிக்கச் சென்று முதலையிடம் சிக்கிய பெண்ணை தேடும் பணி தீவிரம்

மீன்பிடிக்கச் சென்று முதலையிடம் சிக்கிய பெண்ணை தேடும் பணி தீவிரம்

‘தலைவருக்கு சொல்லுங்கள்’ என பெயரிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்துக்கு மக்கள் மயமாக்கும் செயற்றிட்டமாக இதனை நடைமுறைக்கு கொண்டுவர உள்ளனர் என தெரியவந்துள்ளது.

வேலைத்திட்டங்கள்

புலம்பெயர்ந்த மக்களுக்கு உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள், ஆட்கடத்தல் மற்றும் வேலைக்கு அனுப்பும் போது இடைத்தரகர்கள் மற்றும் அதிகாரிகளினால் முறைகேடாக பணம் பெறும் நடவடிக்கைக்கு எதிராகவே இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சேவைகள் பணியகத்தின் புதிய திட்டம்: வெளியாகியுள்ள தகவல் | Foreign Service Bureau Launche New Scheme Today

மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சிறந்த சமூக பணியை முன்னெடுத்து வருகின்ற நிலையில் புதிய தொலை நோக்குப் பார்வையுடனும், புதிய அரசாங்கத்துடனும் மக்களுக்குத் தேவையான சேவையை வழங்குவதற்கும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்நிகழ்வு உறுதுணையாக இருக்கும்.

வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர். இப்படியான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக பொதுவான இடம் ஒன்றினை உருவாக்க முயற்சித்துள்ளதுடன், நடைமுறைக்கும் கொண்டுவந்துள்ளோம்.

வெளிநாட்டு சேவைகள் பணியகத்தின் புதிய திட்டம்: வெளியாகியுள்ள தகவல் | Foreign Service Bureau Launche New Scheme Today

முறையான தீர்வுகள்  

இந்த திட்டத்தின் மூலம் நியாயமான சேவையை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இது தொடர்பில் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்.

மக்களுக்காக அனைத்து வகையான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், துக்கங்கள் என்பவற்றை டென்சில் கொப்பேகடுவ தெருவில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமையகத்தின் கீழ் தளத்தில் ‘தலைவருக்கு சொல்லுங்கள்’என்ற புதிய கிளையில் பல்வேறு வழிகளிலும் பதிவு செய்யலாம்.

இதற்காக பணியக தலைமை அலுவலகத்தில் சிறப்பு பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், புகார் பெட்டியும் நிறுவப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட புகார்களுக்கு சிறந்த தீர்வு வழங்கவும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

வெளிநாட்டு சேவைகள் பணியகத்தின் புதிய திட்டம்: வெளியாகியுள்ள தகவல் | Foreign Service Bureau Launche New Scheme Today

வெளிநபர்களினாலோ அல்லது அரச அதிகாரிகளினாலோ எந்த அநீதியும் நடைபெறாது. அதையும் தாண்டி எந்தவகையில் அநீதி ஏற்பட்டாலும் அதற்கு தீர்வு வழங்குவதற்கு தராதரம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார்தாரரின் தனியுரிமையைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 0112 864188 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உங்கள் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அத்துடன் 0717 593 593 எனும் வட்சப் இலக்கத்தின் மூலம் மற்றும் talkchairman@slbfe.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை பதிவு செய்ய வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை

தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை

அஞ்சல் மூல வாக்களிப்பு! வாக்காளர் பட்டியலை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கை

அஞ்சல் மூல வாக்களிப்பு! வாக்காளர் பட்டியலை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery